புரிந்தது தெரிந்தது

பொய்த்து போகும்

காதல்
வேண்டாமென்று

படித்தது சொன்னது
புரிந்தது

உண்மையாய்

வாழ்வை காதலிக்க
வேண்டுமென்று

அநுபவம் சொன்னது
தெரிந்தது

படித்ததை எடுத்துக்
கொண்டேன்

பருவங்கள் கடந்தது
இனிமையாக

அநுபவத்தை ஏற்றுக்
கொண்டேன்

காலங்கள் கடக்கிறது
இளமையாக..,

எழுதியவர் : நா.சேகர் (11-Feb-19, 7:19 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 342

மேலே