காலைப் பொழுதில்

அடிவானம் சிவக்க /
அந்த நொடியே ,
பறவை இறக்கை விரிக்க/
கல கலப்பு ஓசையோடு ,
என் இல்லமதைக் கடக்க /
படித்த நாள் ஏட்டை மடித்த படியே,
நான் பார்த்து வியக்க /
சொற்ப வேளையிலே ,
சொக்கித்தான் போனது என் மனம் /

காலைப் பனியோடு கலந்த காற்று /
மெது மெதுவாக வீசி /
ஆடை இல்லாத இடம் பார்த்து /
நுழைந்து என் மேனியைத் தடவி/
நழுவி விலகிடவே நானும் /
அதற்குள்ளே மூழ்கித்தான் போனேன்/

சுற்றி வர இருந்த
இல்லங்களில் இருந்து /
புறப்படும் ஒலிகள் /
காதுக்கு இனிமையையும் /
மனசுக்கு எரிச்சலையும் /
கலந்தே கொடுக்கின்றது /
அதட்டலோடு அன்னையின் குரல்/
தூக்கக் களைப்போடு பிள்ளையின் குரல் /
வேடிக்கையும் வேதனையும்/
மனதில் கலந்தே பிறக்கும் /
வாழ்வை மனம் பின் நோக்கி இழுக்கும்/

காலைப் பொழுதைப் பற்றி
களைப்பு இன்றிக் கூறலாம் /
காலைக் கடமை எனக்கும் உண்டு/
காலைப் பணி நிறைந்தே உண்டு/
நெற்றியில் வந்து முட்டியது
நினைவலை கொண்டு /
மண்டு என்று என்னை நானே
திட்டிக் கொண்டு எழுந்து விட்டேன் /
கடமைகளை முடிக்கத் தொடங்கி விட்டேன் /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (12-Feb-19, 9:44 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : kaalaip poluthil
பார்வை : 194

மேலே