படிப்பும் வேலை வாய்ப்பும்

அடுப்பிற்கும் அழகு கிளியைப் போல்
பறக்க ஆசை வந்தது
துடுப்பையையும் அகப்பையையும் துணைக்கு
அழைத்துக் கொண்டது
பயிற்சி பல செய்து செய்து
பறக்க நினைத்து துவண்டது
அழற்சி பல கொண்டாலும்
முயற்சியை மட்டும் தொடர்ந்தது
இறக்கை ஒன்று இருந்தால் தான்
எடுக்கும் பயிற்சி வெற்றி பெறும் என்று
முடிவில் ஒன்றைக் கண்டு நின்றது.
- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Feb-19, 2:40 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 379

மேலே