மரம் போல் மனங்கொள்

மரிக்கும் அளவுக்கு சிதைப்பினும்
மலத்தால் வேரினை நிறைப்பினும்
மனம் போன இடங்களில் நடுவினும்
ஆற்றல் சொரிந்த மண்ணில் வளர்வினும்
ஆங்காங்கே சிதைவைக் கொடுப்பினும்
நெடும் பகுதி நெருப்பினால் அழியனும்
நிலையில்லா நிலை வருவினும்
நிமிர்ந்து நெடு நிலையாய் நின்று
நீள் துயரங்களை நொடி தோறும் வென்று
தம் நிலைதனை சிறுதளவும் குன்றாது
நல் காயும் பூவுமாய் செழித்து
நன்மை மட்டும் செய்யும் மரம் போல்
மகத்தான மனங்கொள் மனிதா.
- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Feb-19, 5:41 pm)
பார்வை : 5513

மேலே