யாராவது…

அதிகாரம் என்பது
பணத்தால் வருவதா? பதவியால் வருவதா ?
அதிக காரம் என்பது
நிலத்தால் கிடைப்பதா? செடியால் கிடைப்பதா?
உதிரம் என்பது
உணவால் கிடைப்பதா? நீரினால் சுரப்பதா?
உதிரும் என்பது
முற்றிய நிலையில் பெறுவதா? முடியா நிலையை அடைவதா?
விலை என்பது
உற்பத்திக்கா? உருவாக்குவதற்கா?
விளை என்பது
உயிர் வாழ்வதற்கா? விவரம் தருவதற்கா?
பணம் என்பது
பண்டம் மாற்றுதலுக்கா? பகட்டை காட்டுவாதற்கா?
பிணம் என்பது
முடிவை செல்வதா? முயன்றதை சொல்வதா?
தனம் என்பது
குணத்தை சொல்வதா? செல்வ குவியலை செல்வதா?
தானம்
செயலை செல்வதா ? செம்மையை காட்டுவதா?
எனக்குள் இப்படி எண்ணிலடங்கா கேள்விகள்
இயன்றதை வினவியுள்ளேன் யாரவது பதிலை கூறுங்கள்.
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (13-Feb-19, 5:40 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 313

சிறந்த கவிதைகள்

மேலே