வெல்க தமிழ் கட்டுரை

தமிழ் வெல்க
ஆதியில் தோன்றிய மொழி தமிழ்
தான்தோன்றித்தனம் அதன் தலைக் கிரீடமே /
பரம்பரையில் தமிழ் நம்மையும்
நம் பழக்க வழக்கத்தையும் தன் கட்டுக்கோப்புக்குள் அடக்கியாள்கிறது
பேசும் நம் தமிழ் மொழி பசுமையான செம்மொழி ,
தமிழர்களாகிய நம்மை மட்டுமே தமிழ் எனும் அழகிய கோட்டை சுற்றி வளைத்து கொள்கிறது , சொர்க்கமுண்டு நம் தமிழில் , சோதனைகள் வந்தாலும் சீண்டிட தாங்கமாட்டோம்,
நெஞ்சை நிமிர்த்தி நேர்நோக்கும் தமிழன் நிலைதடுமாற மாட்டான் ,
அந்நியன் நம்மை ஆட்கொள்ள அயல் நாட்டில் எத்தனை கொடுமைகள் , கொலைகள் செய்தானே நினைத்தால் இன்னமும் வலிக்கிறது நெஞ்சமெல்லாம்,அவன் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு இளைத்திட்ட அநியாயங்கள், அடக்குமுறைகள் ஆதிக்கவெறி,,
,தமிழன் மனதில் ஆறாத ரணமாகி விட்டது.
அவையாவும்
தமிழன் இரத்தத்தில் கொதிநிலையில் இன்றும் ,
என்றும் மறையாது, மாறாது மானமுள்ள தமிழனுக்கு,
தமிழா உன் இரத்தம் கொதிக்கிறது , ஆனாலும் சிந்திப்பவன் நீ ,
உன் எதிரியை வீழ்த்துவது உன் அறிவு எனும் ஆயுதம்,
பொறுமையும், பாய்ச்சலும் வெல்லும் தமிழனுக்கு கைவந்த கலையாகும் .
., தமிழுக்கு நிகர் தமிழனே /வளைந்து கொடுப்பதும், நிமிர்ந்து நிற்பதும்
நம் தமிழ் தந்த சீதனம் ஆச்சே ,
வெல்லும் தமிழ், வெட்ட வெட்ட தழைக்கும் தமிழ் ,
என்றும் தடம் புரளுவதுமில்லை, தலை குனிவதுமில்லை
அது சாய்வதில்லை, சரிவதில்லை ,
பல்லாயிரம் படைகள் புடைசூழ வந்தாலும் ,அஞ்சா நெஞ்சம் கொண்டவன் தமிழன்,
அறிவிலே மிளிர்ந்தவன் தமிழன் ,அன்பிலே வளர்ந்தவன் தமிழன் ,
அத்தனை படைகளையும் சாய்த்திட, வீழ்த்திட
வீரமே உயிராக கொண்டவன் தமிழன்,
தர்மம் வெல்ல தமிழாக, தமிழ் மூச்சாக நின்று வெல்பவன் தமிழன் ,
தமிழ் எனும் தணியாத சுடர் ஒளி தரணி எங்கும் தண்ணொளி வீசட்டும் ,
தமிழ் காக்க,, தமிழ் குலம் காக்க, குன்றின் மேல் எரியும் விளக்காய்
தமிழ் எனும் சூரியன்,
தமிழ் காக்க தமிழன் வளம் காக்க
ஒளிரட்டும் தமிழே உன் ஒளியே /
ஒளியாக தனைத் தந்த தமிழ் வெல்க, என்றும் வாழ்க
வெல்க தமிழ், என்றும் வாழும் தமிழ் வெல்க.

எழுதியவர் : பாத்திமாமலர் (14-Feb-19, 12:44 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 397

சிறந்த கட்டுரைகள்

மேலே