யாரோவாகிப் போன அவள்

உயிரும் உடலுமாய்க் கலந்திருந்தாள்
உருகியெனை அன்று அன்பு செய்தாள்
எருமை ஏறா எமனாய்க் காலம்
எனைக் கவர்ந்தெங்கோ கொண்டு செல்ல உருவே மறக்கும் நெடும் பிரிவால்
பெருக விழிநீர் உகுத்தவள் தான்
அருகில் நான் அற்றுப்போனதனால்
தரு நீரொழியப் பசும்பாலுண்
குருகாயிருக்க மறந்தனளோ?
பெருந்துயரில் எனை மூழ்கடித்து
அருகில் கண்டும் ‘யாரோ’வாகிக்
ஒரு பறவை என மதிமயங்கிக்
கருநாகத்துடன் போந்ததென்ன...!

~தமிழ்க்கிழவி.

( இவ்வாரம் தினமணி-கவிதைமணியில் வெளியான கவிதை)

எழுதியவர் : (20-Feb-19, 9:49 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 2509

மேலே