சிரிப்பு
சிரிப்பு
வாய்ப்பூட்டைத் திறக்க கள்ளச்சாவிதான் வேணுமா?
வாயைவிட்டுச் சிரித்தால் நோய்தான் விட்டுப்போகுமே !
சிரிக்க நேரம் ஒதுக்கி விடு !
வாழ்வை வசந்தம் ஆக்கி விடு!
சிரிக்கத் தெரிந்த மனிதா நீ
சிகரம் தொட வாழ்வாய் அல்லவா !
சிரிக்கக் கூட நேரம் இன்றி
சிறை வாழ்வைக் கொண்டதும் ஏனோ ?
பிறந்த குழந்தை தானாய் சிரிக்கும்
மும்மாதக் குழந்தை முகம் பார்த்து சிரிக்கும்
தவழும் குழந்தை அழகாய் சிரிக்கும்
நடக்கும் குழந்தை விழுந்து விழுந்து சிரிக்கும்
சின்னக் குழந்தையாய் நீ இருந்தால்
சிரிப்பே உந்தன் சொத்தாகுமே !
சிரிக்க நீயும் மறந்தால் மனநோய் வந்து சேருமே !
சிரித்துச் சிரித்துத் திகட்டச் செய்வாய் மனமே !
-பாரியூர் தமிழ்க்கிளவி