ஆசான்

ஆசான்



ஆசான மறக்கமுடியுமா ? சொல் மனமே

தாய்போலத் தோள் கொடுத்தவரை..



அன்பு காட்டி அமுதூட்டி

பெத்தவளை மறக்க வைத்த

உங்கள் அன்பை எந்நாளும்

மறக்க முடியலை



தோள் கொடுக்கும் தோழனாக

பண்பு பாசம் சொல்லிக் கொடுத்த

தாயன்பை எந்நாளும்

மறக்க முடியலை



காலநேரம் பார்க்காமல்

பாடங்களைச் சொல்லிக் கொடுத்த

தாயான உங்களையும்

மறக்க முடியலை



தோல்விகண்டு துவண்டபோது

தோல்விதான் வெற்றியின்

வாசல் என்று சொன்னவர

மறக்க முடியலை



மாநிலத்தின் முதல் மதிப்பெண்

பெற்றபோது பெரிதுவந்து

கண்ணீரால் எனையணைத்தவரை

மறக்க முடியலை



டாக்டர் ஆகு கலெக்டர் ஆகு

என்று பலரும் சொன்னாலும்

நானும் ஒரு நாள்

ஆசானாக மாற விரும்பறேன்.

பாரியூர் தமிழ்க்கிளவி

எழுதியவர் : பாரியூர் தமிழ்க்கிளவி (24-Feb-19, 4:13 pm)
சேர்த்தது : PULAVARSUMATHI
Tanglish : aasaan
பார்வை : 24

சிறந்த கவிதைகள்

மேலே