முக்கி பெக்கும் தாயவளாள்

கண்ணால் பார்ப்பதினால்
மனதால் மகிழ்ந்து உணர்வதிலும்
அதைப் பற்றி தடவுதலிலும் - அப்புலன்கள்
அனைத்தையும் தழுவுதலிலும்
அலாதியான .ஆனந்தம் உடலில்
ஆர்ப்பரிப்பதால் எழும் ஆனந்தத்தால்
ஆனந்தநீர் குரி வழி சென்று சுரேனி அடைந்து
விதையாகி கருவாகி உருவாகி
ஆணென்றே பெண்ணென்றோ அவையாகி
ஐயிரெண்டு திங்களில் பெரிதாகி
முழு உருவுக்கு பங்கமின்றி முழுதாகி
முக்கி பெக்கும் தாயவளாள் உலகைக் கண்டு
சிசுவாகி சிறியதாகி பெரியதாகி
சேட்டை செய்யும் பருவங்கடந்து செம்மையாகி
உலக நாட்டமதில் நோட்டம் கொண்டு வாழ்க்கைப் பெற்று
வளமும் பிளவும் என பல வகையினாலே
ஏற்றத்தோடு இறக்கத்தோடும் இருக்கும் நம்மை
இயக்கும் இறையின் செயலை எண்ணி
எத்துயர் வரினும் ஏகாந்திருப்போம்.
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (25-Feb-19, 5:08 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 514

மேலே