மகளிர் தினத்தன்று சில வரிகள் 080319
பெண் இனத்தை புகழ்ந்து பாடி
அருமை பெருமைகளை ஆத்மார்த்தமாய் சொல்லி
அளவிலா மகிழ்ச்சியினை அவர்களுடன்
பகிர்ந்து கொள்ளும்
ஆண் வர்க்கத்திற்கு ஆழமான சில வரிகள்
மழலை முதல் முதியோர் வரை
பெண்டிர்க்கு நிகழும் தீங்கதனை
அந்த நிமிடம் வசை பாடி கண்டிப்பது தான்
தங்கள் கடமை என நினைப்போரே
ஆசைக்கு அர்த்தங்கள் பல உண்டு அறிந்திடுவீர்
மகளாய், சகோதரியாய், தாயாய்,
ஏன் தோழியாய் கூட பார்க்க நீங்களும் தவறியதால்
பலவகை அட்டூழியங்களுக்கு ஆட்படுவது பெண்கள்தான்
ஆணாய் உன்னை ஆண்டவன் படைத்ததினால்
ஆளுமை உணக்குண்டு என நீயும் நினைப்பதினால்
உன் 'முரட்டு' செய்கைகளை
அவர்கள் மீது திணிக்கின்றாய்
யாரோ ஒரு சில ஆடவரின் நடவடிக்கைகளை மனதில் கொண்டு
ஒட்டு மொத்த ஆண் குலத்தை பழிப்பது சரியா என
வாதாடும் மானிடரே .... சற்றே சிந்தியுங்கள்
பாதிக்கப்படுவது நம் சொந்தம் என்றால் மனம் பதறும்
இல்லையென்றாலோ மனம் கனக்கும்
இதுதான் நம் வாழ்க்கையின் நிலையென்றால்
அதை மாற்ற வேண்டும் என உறுதி எடுத்திடுவோம்