மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் – மெட்டு

2 மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் – மெட்டு
தன்னலம் கருதா தயையே உன்னைப் போற்றி நின்றேன் – தினம்
தாள்மலர் போற்றியே உன் திருவருள் வேண்டியே வாழ்த்தினேன் – என்
சிந்தையில் மேவிடும் அன்புத் தந்தையே உந்தனின் – உயர்
சீர்புகழ் போற்றிப் பாடிடவே நான் விரைந்து வந்தேன்.
ஆ................ ஆ................ (தன்னலம்)

பொன் பொருள் பேர்புகழ் யாவும் எனக்கே நல்கினாய் – உன்
கண்ணின் மணியென எந்தனை நாளும் பேணினாய் – தமிழ்ப்
பண்ணால் உன் மனம் குளிர்ந்திட என்றும் வாழ்த்தவே – தினம்
தண்ணளி செய்வாய் தயை நீ எனக்கே நாளுமே
ஆ................ ஆ................ (தன்னலம்)
செம்மொழிச் சுடரே செந்தமிழ்த் தேனே உந்தனின் – பல
செம்மை மேவிய புகழினைப் போற்றியேப் பாடினேன் –எந்தன்
அன்புத் தந்தையே அகமதில் நிறைந்திட்ட பெருந்தகையே –உந்தன்
அடிமலர் பரவவே வாழ்த்தருள் புரிவாய் ஐயனே....
அப்பா........................அப்பா......................அப்பா......................அப்பா...........(தன்னலம்)

குறிப்பு:
தந்தையை தெய்வமாக வழிபடுபவர்கள் மனமுருக இதனை வேண்டிப் பணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
அன்புடன்
திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி,
கோவை-22

எழுதியவர் : திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி, (8-Mar-19, 3:41 pm)
பார்வை : 101

மேலே