பாதகத்தி உன்னை நினைத்து

பாதகத்தி! உன்னை நினைத்து பாறாங்கல்லா ஆச்சு நெஞ்சு.
பறவையதும் றெக்கை ஒடிஞ்சு விழுகுதடி எடை அதிகரிச்சு.
பச்ச மரம் ஒன்னு பொசுக்குனு பட்டதே,
நீ முறைக்கும் போது எனக்குள் தீ பிடிக்குதே.

உன்கிட்ட கோபிக்க என்னோட மனசை என்னடி செஞ்ச?
சொல்லு சொல்லு.
சாதலை நினைக்க சாமந்தீப் பூவே என்னடி பண்ண?
சொல்லு சொல்லு.

பாதகத்தி! உன்னை நினைத்து பாறாங்கல்லா ஆச்சு நெஞ்சு.

மனசுக்குள்ள கோபம்,
உன்னால நானும் பாவம்,
உள் நாக்குள்ள சாபம்,
நிலைமாறிப்போனேன்.

கானக்குயிலாகப் பறந்து திரிஞ்சேன் நானும் தான்.
காற்றாக என்னைச் சூழ்ந்து சிறைப்பிடித்தாய் நீயும் தான்.

சூரியனோடு வெளிச்சமாய் சேர்ந்துவிட்டேன் நான்.
உன் நினைப்பை உயிரோட கலந்துவிட்டேன் நான்.

பாதகத்தி! உன்னை நினைத்து பாறாங்கல்லா ஆச்சு நெஞ்சு.

அழகா இருந்த மனசை இறங்கி நீயும் குழப்ப திரிந்து நிற்கிறேன் பழசில் இருந்து புரியாமல் தானே!

ஆன்மாக்குள் அடங்கி ஒடுங்கி கிடக்கிறேன் நானுந்தான்.
நினைப்பாக அங்கேயும் வந்து போகிறாய் நீயுந்தான்.

நீ வந்தால் ஆலமரமாய் மனமும் அசைந்தாடுதே.
உன் கூட நகமும் சதையும் போல ஒட்டியிருக்க மனமும் நாடுதே.

பாதகத்தி! உன்னை நினைத்து பாறாங்கல்லா ஆச்சு நெஞ்சு.
பறவையதும் றெக்கை ஒடிஞ்சு விழுகுதடி எடை அதிகரிச்சு.
பச்ச மரம் ஒன்னு பொசுக்குனு பட்டதே,
நீ முறைக்கும் போது எனக்குள் தீ பிடிக்குதே!

உன்கிட்ட கோபிக்க என்னோட மனசை என்னடி செஞ்ச?
சொல்லு, சொல்லு.
சாதலை நினைக்க சாமந்திப் பூவே என்னடி பண்ண?
சொல்லு, சொல்லு.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (10-Mar-19, 8:56 am)
பார்வை : 871

மேலே