ஐத்தானே

கடல் போல் கற்பனை வளர்த்தேன் /
கடுகளவும் கவிதை எழுதவில்லை /
வானளவு கனவு கண்டேன் /
எடுத்துரைக்க வார்த்தை எழவில்லை/

அலை போல் ஆசை உசுப்பி விடவே/
புரண்ட படியே பல ராத்திரி உறக்கம் இழந்தேன் /
உருண்டு உருண்டு புரண்டு புரண்டு
பார்த்தும் /
தூக்கம் வர மறுத்தது /
விடியும் வரை விழித்திருந்தே/

அத்தானே அத்தனையும் உன்னிடம் சொல்லிடவே நினைத்திருந்தேன்/
உந்தன் முகம் பார்த்ததுமே முத்தான வார்த்தையெல்லாம் வெட்கத்துக்கு சொத்தாகிப் போனதையா /

பஞ்சணையில் மூர்க்கம் மிஞ்சவேணுமே/
உன் அஞ்சு விரல் கெஞ்ச வேணுமே /
கஞ்சம் இன்றி முத்தம் சிந்த வேணுமே/
நீ மெல்ல மெல்ல காதில் சேதி
சொல்லச் சொல்ல நான் சின்னச்
சின்ன நாணம் அள்ளிட வேணுமே/

என் ஐத்தானே இத்தனையும்
உரைத்திடவே நான் நாள் எண்ணி
எண்ணிக் காத்திருந்தேன் /
உன் கண்கள் பார்த்ததுமே அத்தனையும் வெட்கத்தின் பக்கத்தில் உறங்கிடிச்சே/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (15-Mar-19, 7:27 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 61

மேலே