அவள்

என்னை தட்டி பார்த்து சிரித்தாள் - பத்து மாத குழந்தையான அவள்

தன் ஆடையைக் காட்டி "அழகா இருக்கா" என்றாள் - 5 வயதான போது

தாயின் புடவையை சுற்றி கொண்டு நின்றாள் - பத்து வயதான போது

தான் பருவை காட்டி வருந்தினாள் - பதினைந்து வயதில்

"நான் அழகா இல்லையோ" என்றாள் - பதினெட்டு வயதில்

"நான் அழகா இருக்கிறேனோ" என்றாள் - காதல் வந்த பின்

என்னை பார்த்து மௌனமாய் சிரித்தால் - திருமண நாளில்

தன் வயிற்றை தினம் தினம் அளவெடுத்து காட்டினாள் - கருவுற்ற போது

தன் தலையைக் காட்டி "நரைத்து விட்டதோ" என்றால் - 60 வயதில்

போகும் போது மட்டும் ஏனோ சொல்லிக்கொள்ள வில்லை

இப்படிக்கு
அவளை பிரதிபலித்த கண்ணாடி

எழுதியவர் : (2-Sep-11, 6:18 pm)
சேர்த்தது : Mithi
Tanglish : aval
பார்வை : 233

மேலே