நிஜம்

உன் அழகை எழுதும் பொழுது
என் பேனா மை மதுவானது...
தள்ளாடியது என் பேனா மட்டும் அல்ல
நானும் தான்...

அதிசயங்கள் அறியாதவன் கேட்டான்
உலக அதிசயங்கள் ஏழு எவை?

சுருள் கருங்கூந்தல் ஒன்று
படப்படக்கும் பட்டாம்பூச்சி விழிகள் இரண்டு
கிளி மூக்கோடு வளவான செவிகள் மூண்று
பரந்த நெற்றியில் கீற்று விபூதி நான்கு
தாமரை இதழோடு கோவை வாய் ஐந்து
சங்கு கழுத்தோடு கொடி இடை ஆறு
புள்ளி மான் கால்கள் இரண்டையும் ஏழு என்றென்

ஆச்சிரியமாய் கேட்டான்
அனைத்தும் பார்தாயா?

வெட்கத்தில் காதோரமாய் -
அவள் என்னவள் என்றென்...

என்றும் அன்புடன்,
மதன்

எழுதியவர் : மதனகோபால் (24-Mar-19, 8:57 am)
சேர்த்தது : மதனகோபால்
Tanglish : nijam
பார்வை : 898

மேலே