வென்றது யார்
ஒரு நொடி மறவா
அலை கரைத் தொட்டதும்...
உன் நினைவலைகள்
முந்தி வென்றதாய்
வாகைச் சூடியது...
கையெழுத்துப் போட்டியில்
உன் பெயர் எழுதினேன்
கைத் தட்டல் கரகோஷம்
எழுத்தும் அழகாய் போனதால்...
ஓவியக் கண்காட்சியில்
ஓராயிரம் படங்கள்
ஓடி வந்துப் பார்க்க
ஒருத்தரும் இல்லை...
உன் படம் வைத்தேன்
ஊரே திரண்டது...
இவளா மோனலிசா!
என்றும் அன்புடன்,
மதன்