ஒன்றுமில்லாமல்
விடைபெற்று முதல் படியில் இறங்கி
இரண்டாம் படியைப் பார்த்து பின்
திரும்பி அவளைப் பார்த்தேன்
ஏதும் சொல்ல வேண்டுமா என்றாள்
சொல்ல வேண்டுமென எதிர்பார்த்தாள்
சொல்ல வேண்டுமென எதிர்பார்த்தேன்
என்ன சொல்வது சொல்வதற்கு
நிறைய இருந்தும் சொல்லத் தான்
ஒன்றுமில்லாமல் போனதேனோ
மெல்லிய புன்னகையுடன்
இறங்கி விட்டேன்