சிற்பியும் காதல் கொள்வான்
அன்பே...
சிற்பியும் காதல் கொள்வான்
சிலையாய் உனை வடித்த பின்பு
சீதையும் பொறாமை கொள்வாள்
சீரான உன் நடத்தை கண்டு
இன்று மலர்ந்த செம்பருத்தி கூட
குன்றி நாணும் உன் முகம் கண்டு
தென்றல் கூட கீதம் பாடும் உன்
கண்கள் மீது காதல் கொண்டு
இத்தனைக்கும் நடுவில் பாவியென்
மனதும் பரிதவிக்குதே உனைக்கண்டு
பூவை எனை ஏறெடுத்து பார்ப்பாயா
பூவின் புன்னகையொன்று தருவாயா...