அவள் கண்கள்
என்னவள் முகத்தில் இருகயல்கள்
என்ன இது எப்போது வந்தன
அங்கு துள்ளி விளையாட என்று
நான் நினைக்க கயல்கள் காணவில்லை
அவள் கண்களைக் கண்டேன் கயலாய்
அவள் நின்றிருந்த இடத்தின் பக்க
ஓடையில் இரு கயல்கள் துள்ளி ஓட
கண்டேன் புரிந்துகொண்டேன் இப்போது
இவள் கண்களைக் கயலென்றெண்ணி அவை
கண்ணோடு விளையாடி அது கயலல்ல
பெண்ணிவள் கண்கள் என்றறிந்து கயல்கள்
திரும்பின ஓடைக்கு கயல் தேடி விளையாட