ஒற்றுமையே ஓங்கணும்

நாலெட்டில் ஒரு கடை திறப்பு
நாளுக்கு நாள் அதிகரிப்பு
ஒழிப்பேன் ஒழிப்பேன் என முழக்கம்
எதிர் எதிர் வர்க்கம்
நடக்காது "மதுவிலக்கு" மறவாதே,

சட்டமும் திட்டமும் அவன்
சட்டைப்பையில்,
சட்டசபையினில் சட்டைக்கிழிக்கணும்
சாதி பேருல சண்ட போடணும்
பொறுக்கி கும்பல கூட வச்சு
"ஆடையை அவுக்கணும் ,
பொண்ணுகளை "சாய்கிறான் மறவாதே,

இரவில் தீ காணாதவன்
இரவல் கேட்டு உன்னிடம்
"குரங்கனி தீ" மறவாதே,
இடை வார் கொண்டடிக்க
அபலை "அண்ணா" வென
அவளொலிக்க இடையினில்
"அவன் குறி" அடங்க வில்லை மறவாதே,

"நான் பாதுகாவலன்" - அடைமொழியாகி
பணமுதலை ஆனா கதை நாளும் மறவாதே,
வான்வெளி சுட்டுவிட்டேன்
"மிஷன் சக்தி" வீழ்த்திவிட்டேன்
மக்களை தான் நடுரோட்டில்
நிக்க வைத்த கதை மறவாதே,

ஒட்டுத்துணி உருவியெடுத்து
மண்டியிட்டு மலம் திண்ணு
தலைநகரில் தவமிருந்து - வேண்டிநின்ற
"விவசாயம்" சாயமான கதை மறவாதே,

ஒத்த திடலில் ஒருமித்து
ஒருகுரலில் ஓங்கிநின்ற
பெரும் கூட்டத்தை - மாடு
மாடு என வசைபாடி "வாடிவாசல்"
கோடி வாசல் ஆன கதை மறவாதே,

காமத்தின் பிடியிலே கைகலப்பு,
கலைக்கூத்தாடியின் பிடியிலே
நாட்டுநடப்ப "நயனாய்"
சூட்சமும் வஞ்சகமும்
சூழ்ந்து விட்ட கதை மறவாதே,

காணிநிலம் வேண்டினான் பாரதி
உன் கை அகல நிலத்தையும்
பிடுங்கியது மறவாதே,
ஆதியோகி அந்தமாகி
"சின்னத்தம்பி" சிதைந்ததை மறவாதே!

பன்னாட்டு பன்னாடைக
கையூட்டு கொடுப்பதால,
ரஃபேல்லுக்கும், ஸ்டெர்ட் லைட்கும்
"கருப்புப்பணமாகிய "கதை மறவாதே,
வாங்கி வைத்த பணத்தையும்
வாய்கரிசியாக்கி
வங்கிக் கணக்குக்கிட்டு
"வரி" மேல் வரியிட்டு
வரிசையில் நிப்பாட்டி
வசைபாடினானே மறவாதே,

"ஓகி புயல் ஒடுங்கினோம்
கஞ்சிக்கு வழியின்றி
கஜா புயலில் கண்ணீர்விட்டோம் "
அடுப்பங்கரை உலைவைக்க
எரிவாயு விலையேற்றம்,
கயவனையே
காத்துநிக்குது காக்கிசட்டை!
கணித்து பேசுனா குண்டர் சட்டம் பாயுது
அவன் மேல மறவாதே,

கெண்டக்கால் நெடுநெடுக்க
குரல்வளம் தழுதழுக்க
கத்தினோம் கதிரா மங்கலம்
வீட்டுவாசல் ஏதுமின்றி
நெடுஞசாலை படுத்துறங்கி
நெடுவாசல் காக்க நின்றோம்
அத்தனையும் பொய்யாக்கி
அவன்வசம் ஆனா கதை மறவாதே,

கர்ப்பிணி பெண்ண எட்டி
மிதிச்சவன் கண்டஎடத்துல
உன்ன கட்டிஅடிச்சவன்
சுத்தினின்னு சுட்டு குமிச்சவன்
உன்னையும் என்னையும்
மொட்டை அடிப்பவன் இன்னும்
திருத்தா கதை மறவாதே,

முப்படை பேரம் பேசி
கடல் மூழ்கி போனகத,
இந்தி பேசு இந்தி பேசு
மீனவன் மயமானக்கதை,
நோட்டுக்குக்கா நீட்டு
புகுத்தியக்கதை மறவாதே,

சட்டமும் திட்டமும்
ஒன்னும் புடுங்காது,
சத்தியமும் சாட்சியமும்
அவன் முடிவில்,
சொன்னதும் செஞ்சதும்
சொல்லமுடியல
அப்பனும் புள்ளையும்
ஒண்ணுகூடி அடக்கி
வச்சகதை மறவாதே,

பாடசாலை விபசாரம்
பச்சிளமும் பலாத்காரம்
காமுகனை கரம்தூக்கும்
ஆட்சியர் மறவாதே,

உரிமைய வாங்கவர
வெளங்காத கூட்டத்த
ஊர் கூடி வெரட்டணும்
மிச்ச ஜனமும் ஒண்ணா வாழ
ஒற்றுமையே ஓங்கணும் மறவாதே!

எழுதியவர் : ச. சோலைராஜ் (29-Mar-19, 11:24 am)
சேர்த்தது : ச சோலை ராஜ்
பார்வை : 52

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே