தவிர்த்திடவே நான் விரும்புகிறேன்....!
வாழ்க்கைப் பாதையின்
கொடூரம் பற்றி
ஓயாமல் புலம்புகிறாய்...!
முட்களை அகற்றிட
முயன்று பார்க்காமல்
முட்டாள் தனமாக
முதலுதவி கேட்கிறாய்...!
தவறி விழுந்த
தடைக் கற்களை
தாண்டிட முயலாமல்
கல்லின் கடுமைப் பற்றி
இடைவிடாது விமர்சிக்கிறாய்...!
தடத்தின் பாதைகள்
தடுமாறி போனாலும்
தட்டி சரி செய்ய
சிறிதும் எண்ணாமல்
தவறினை எண்ணியே
நாளும் அழுகிறாய்...!
தைரியமில்லா
என் மனமே
உன்னை தவிர்த்திடவே
நான் விரும்புகிறேன்....!