அவள் கண்ணழகு

மொட்டாய் மூடி இருந்தாலும் அழகு
கதிரவன் கிரணம் பட்டு இதழ்கள்
விரிந்தாலோ பேரழகு கமலமே நீ
எந்தன் காதலியின் கண் போல
மூடி இருந்தாலும் அவள் கண்ணழகு
உந்தன் மொட்டுபோல் இமைத்
திறந்து அவள் பார்க்க அதில்
விரி தாமரையே உந்தன் எழிலே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Apr-19, 1:53 pm)
பார்வை : 619

மேலே