மக்கள் எல்லாம் மக்காய் உள்ளவரை
நகரப் பேருந்து நாலு சக்கரம் பாயும் பேருந்து
சிறந்தப் பேருந்து மிகச் சிறந்த பேருந்து
சாய்வு தளப் பேருந்து தூங்கும் வசதிப் பேருந்து
குளிரூட்டிய பேருந்து குலுக்கி விடாப் பேருந்து
அரசு விட்டுள்ள அற்புதப் பேருந்துகள் வகை
40 கிலோ மீட்டருக்கு ரூபாய் 15 முதல் 52 வரை
அவைகளின் வேகமோ அனைத்தும் ஒன்றாய்
இருக்கைகளின் தரமோ எதற்கும் பொருந்தாமல்
பேரில் மட்டுமே பேருந்துகளின் வகை
ஏன் இது என்றால் இறக்கி விடுகின்றனர்
எப்புகார் அளிப்பினும் ஏளனிக்கின்றனர்
சட்டத்தின் வழிச் சென்றால் மரச்சட்ட அடி வருது
பணம் என்ன வானத்து மழையிலா வருது
பொய்க் கூறும் அரசுக்கு இது எங்கே புரியுது
மக்கள் எல்லாம் மக்காய் உள்ளவரை
மாநிலம் ஆளுவோர் கெடு செயலையே செய்வர்.
---- நன்னாடன்.