நெகிழி

நான் நெகிழி

நான் மண்ணுக்குள்
மக்காதவன்
அமீபா கண்ணுக்குச்
சிக்காதவன்

கண்ணதாசன்
எனக்காக எழுதிய
கவிதை
நான்
நிரந்தரமானவன்
அழிவதில்லை
எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை

என்னை
குப்பையில்
போடாதீர்
நற் பையில்
சேகரியுங்கள்

நான் உங்களைப்போல்
அன்பு கூட்டினால்
நெகிழ மாட்டேன்
வெப்ப சூட்டினால்
நெகிழ்வேன்

உங்கள்
தலைக்கு சீப்பு நான்
சுற்றுசூழலின் தலைக்கு
ஆப்பு நான்

நீங்கள்
உங்கள் தாய்மடியில்
அமர்ந்த நேரத்தைவிட
என் நாற்காலி மடியில்
அமர்ந்த நேரமே அதிகம்

நெகிழிக்கு விடை
கொடுப்போம்
என்கிறீரே
முதலில் உங்களுக்கு
எதுவும் செய்யாத
அரசியல்வாதிகளுக்கு
விடை கொடுங்கள்

என்னை முறைப்படுத்த
நினைக்கும் சுற்றுச்சூழல்
பொறியாளர் ரமேஷ்
அவர்களை நான்
பாராட்டுகிறேன்

நான் வளைந்து
கொடுப்பேன்
அரசியல்வாதிபோல்
கொள்கை மறந்து
ஒடிந்துவிட மாட்டேன்

இயற்கையை
காக்கும் கட்சிக்கு
போடுங்கள் ஓட்டை
பிறகு ஏன்
விழப்போகிறது
ஓசோனில் ஓட்டை

நெகிழியை
நெகிழ வைப்போம்
சுற்றுசூழல் காப்போம்

எழுதியவர் : புதுவைக் குமார் (5-Apr-19, 3:11 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 89

மேலே