உச்சுவாலா

அம்மா பையன் பொறந்து ஒரு வாரம் ஆகுது. நம்ம கிராமத்தில தமிழ்ப் பேரு வச்சிருக்கிற சனங்க ரொம்பக் கொறைவா இருக்குது. இப்பெல்லாம் பிள்ளைங்களுக்கு இந்திப் பேரு வைக்கிறதுதான் நாகரிகம். உங்கப் பேரனுக்கு நீங்களே உங்களுக்குப் பிடிச்ச இந்திப் பேரா வையுங்கம்மா.
@@@@@
இந்த மூணு மாசமா அந்த டிவி பொட்டில 'உச்சுவாலா', 'உச்சுவாலா' ன்னு (உஜ்வாலா) ஒரு வார்த்தையைச் சொல்லறாங்க. அந்த வார்த்தையையே எஞ் செல்லப் பேரனுக்குப் பேரா வச்சிருடா.
@@@@@
நானும் 'உஜ்ஜுவாலா' ங்கற வார்த்தையைக் கேட்டிருக்கிறேன்.சரிம்மா, நாளைக்கு உங்க பேரனுக்கு வாயில சக்கரைத் தண்ணி ஊத்தி அவங் காதில மூணு தடவ "உஜ்ஜுவாலா", "உஜ்ஜுவாலா"', "உஜ்ஜுவாலா"ன்னு சொல்லுங்க.
@@@@
சரிடா மகனே மனோராசு.
■■■■■■■□■■■■■■■■■■■■■■■■■■
Ujjwala = bright, lustrous, splendorous

எழுதியவர் : மலர் (8-Apr-19, 5:49 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 74

மேலே