பிழை...

முற்பிறவியில் செய்த வினை
இப்பிறவியில் தொற்றுதடா..
இப்பிறவி முடிவுரையில்
முற்பிறவி தெரியுதடா..
செய்த வினை முடித்திடவே
எய்தவனை தேடுகிறேன்
கூடி பேசி சிரித்தவரும்
கொடுக்கல் வாங்கல் வைத்தவரும்
ஓடி ஒழியும் நேரத்திலே
உண்மைதனை காணுகிறேன்
என்னை அறிந்த உள்ளம் தனை
நானிழந்து நின்று விட்டேன்
நான் வளர்த்த காதல் மட்டும்
நானே மோதி தேய்த்து விட்டேன்..



எழுதியவர் : (3-Sep-11, 1:28 pm)
சேர்த்தது : saige
பார்வை : 385

மேலே