எது காதல்

எது காதல்?
பார்த்தவுடனே இதயதில் பட்டாம்பூச்சி பறந்தால் அது காதலா?
புகழ் பேசி சொற்களால் மாய வலயத்தில் சிக்கவைப்பது காதலா?
வித விதமா பரிசு குடுத்து வசப்படுத்துவது காதலா?
சுற்றிருக்கும் யாவர்க்கும் தெரியாம மறைந்து மகிழ்வது காதலா?
பெற்றவரை மறந்து புது உறவை மற்றும் உலகமா நினைப்பது காதலா?

சற்று யோசித்துப்பாத்தேன்,

திட்டமிட்டு, பலனை எதிர்பார்த்து செய்வது காதல் அல்ல
ஆனால், அவசரப்பட்டு முடிவிக்குவருவதில் தான் சிக்கலே

இருமனம் காதலால் ஒன்றாகி, திருமண வாழ்க்கை தொடரினால்தான், காதலுக்கு வெற்றி
வாழ்த்தி முன்னேற உதவும் கரங்கள் சுற்றி இருப்பதுடன், காதலர்களுக்கு வெற்றி
உறவை அறுத்து உறவை தொடராமல், உறவினர் மனம் ஜெயித்து உறவாடுவதுதான் காதலுக்கும் காதர்களுக்கும் வெற்றி

இது அல்லவா காதல், நீங்களும் யோசித்து பாருங்கள்

காதல் மலர, காதலர்கள் ஜெயிக்க, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

எழுதியவர் : ராகவன் கே (18-Apr-19, 7:42 pm)
சேர்த்தது : RaghavanK
Tanglish : ethu kaadhal
பார்வை : 288

மேலே