எறும்பின் காதல்
கவிஞர் சங்கமம்
எறும்பின் காதல்
அவள்
கடித்துத் துப்பினாள்
கரும்பு
விருந்துண்டது
எறும்பு
அவளைக்
கடித்த எறும்பு
மறு பிறவியில்
ஆவதோ
அரும்பு
அவளின்
பாதம் மிதிபட்ட
எறும்பிற்கு மரணம்
அடைவதில்லை
மாறாய் மணம்
அடைகிறது
தண்ணீரில்
தத்தளித்த எறும்பு
அவள் கை கொடுத்ததும்
உவகை அடைந்தது
சக்கரையைத்
தேடி வந்த எறும்புகள்
இவளைக் கண்டதும்
டப்பாவை விட்டுவிட்டு
மகிழ்வோடு சென்றன
இவளின்
அப்பாவின் பாதங்களைத்
தொட்டுவிட்டு
எறும்புகள்
மிகவும் சுறுசுறுப்பாய்
சென்றுகொண்டிருந்தன
அங்கே அரிசி இல்லை
அந்த
அரசி இருந்தாள்