சிறந்த குடும்ப வாழ்க்கை

சிறந்த குடும்ப வாழ்க்கை

இந்த இருவர் முன்பு சந்திக்கவில்லை
முதல் சந்திப்பில் பேசினது சிறிதே! அதனால் முழுசா அறிய வாய்ப்பு இல்லை

பரஸ்பர அங்கீகாரம் அவர்களை மணமேடை வழிநடத்தி ஒன்று சேர்த்தது
புது உறவு! புது வாழ்க்கை! இயற்கையான ஆசைகள் மலர தொடர்ந்தது

காதல் அனுபவமே இல்லாத இந்த இருவர், ஆழ்ந்த காதலர்களாக மாறிவிட்டார்
ஆண்டவன் அருளால் குழந்தை பாக்கியம் பெற்று மகிழ்ந்தார்

நம்பிக்கை இவர்களின் காதலை புனித படுத்தியது
குடும்ப பொறுப்பு இவர்களின் பந்தகத்தை பலப்படுத்தியது

யோசித்து எடுத்த முடிவுகள் இவர்கள் முன்னேற கை குடுத்தது
பொத்தி வளர்த்த பிள்ளை கை கூடி வந்து, குடும்ப கெளரவம் பெருகியது

இவ்விதமான குடும்ப வாழ்க்கை அமைவது ஒரு வரம்
கணவனும் மனைவியும் இணைந்து முயற்சித்தால் இது இல்ல அசாத்தியம்

எழுதியவர் : ராகவன் கே (19-Apr-19, 10:19 pm)
சேர்த்தது : RaghavanK
பார்வை : 150

மேலே