இளமை எனும் பூங்காற்று

இளமை எனும் பூங்காற்று
மரப் பொந்தில் ஒளித்துவைத்த
ஐந்து பைசா நாணயமும்
பெற்றோர் அறியாது
பொறிக்கித்தின்ற புளியங்காயும்
வேப்பமுத்துக்கு மாற்றாகிப் போன
கருப்பட்டி மிட்டாயும்
தோழியோடு சறுக்கி ஆடிய
சின்னக் கரும்பாறையும்
மீன் குஞ்சென பிடித்து வந்த
தலைப் பிரட்டைகளும்
மலை எங்கும் ஓவியமாகிப்போன
சுண்ணக் கிறுக்கல்களும்
சுற்றி சுற்றி விளையாடிய
களர் தொலிக்கும் களங்களும்
குளத்து நீரில் தாழ ஆடும்
ஆல் மரத்து ஊஞ்சல்களும்
நெல்லுக்கு காவலிருந்த
சாலையோரப் பரண்களும்
பதித்து வைத்த ஞாபகங்கள்
தங்களை புதுப்பித்துக் கொள்கின்றன
எனைக் கடந்த போன இளமை தனை
கரம் பிடித்து இழுத்து வந்தே…….
ஏன் கடந்தோம் இவளை என்று
இன்னும் அவை ஏங்கிக் கொண்டே….
சு.உமாதேவி