413 ஊண் உடை மேல் உள்ள பொருள் ஒல்லாச் சுமை மயக்கே - பொருளாசை ஒழித்தல் 9

அறுசீர் விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

மண்டுபெருந் தனமிருந்துங் கண்டுமகி ழுவதல்லான்
..மயல்போன் முற்றும்
உண்டுவிட வொண்ணுமோ நினைவிற்கும் பஞ்சமோ
..உலகந் தன்னிற்
கண்டபொருள் அத்தனையும் எமதுசெல்வர் அப்பொருளைக்
..காத்தெ மக்குத்
தொண்டுசெய்வோர் எனவுன்னி மகிழ்வுற்றால் தலைபோமோ
..சொல்லாய் நெஞ்சே. 9

- பொருளாசை ஒழித்தல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

உள்ளமே! அளவிட முடியாத செல்வமிருந்தும் அதனைக் கண்டு மகிழ்வதல்லாமல், ஆசையால் மயக்கம் கொண்டு அச்செல்வம் முழுவதும் உண்ண முடியுமோ?

இது போன்ற நம் நினைப்பிற்கும் தடை உண்டோ? உலகத்தில் காணப்படும் பொருள் முழுவதும் நம்முடையதே.

செல்வர்கள் அப்பொருளைக் காத்து நாம் வேண்டும் போது நமக்குத் தந்து தொண்டு செய்பவர்கள் என்று நினைத்து நாம் மகிழ்ந்தால் நம்முடைய தலை போய்விடுமா? என்று சொல்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

மயல் - ஆசையாலமிழ்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Apr-19, 8:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

சிறந்த கட்டுரைகள்

மேலே