காதல் செய்வோருக்கு நம்பிக்கை கவிதை
இனிக்கும் காதல் மொழி
காதலனே
அவள்
பொருக்கி
என்கிறாளா?
மனம் தளராதே
அப்படி என்றால்
என் மனதைப்
பொருக்கி
என்று நினை
அவள் செருப்பு
பிஞ்சுவிடும் என்கிறாளா?
கவலைப் படாதே
அப்படி என்றால்
பொரு சிறு பூ
கொஞ்சம் நாளானால்
பிஞ்சு விடும்
என நினை
நாயே
என்கிறாளா?
மகிழ்ச்சி கொள்
மனிதனைக் காட்டிலும்
நன்றி உள்ளவன்
என்கிறாள் என நினை
பின்னால் சுற்றாதே
போ என்கிறாளா?
உள்ளம் உடையாதே
பின்னால் சுற்றி வை
பூ என சொல்கிறாள் என்று கனவு காண்
காரி துப்புகிறாளா?
நாம் கட்டப்போகும்
காரிகைதானே
என நம்பிக்கை கொள்
அவள்
த்தூ என்றாலும்
நீ தூரம் செல்லாதே
ச்சீ என்றாலும்
அவள் கட்சியில் இரு
துடைப்பம்
கட்டினாலும் கூட
அவள் கண்ணீர்
துடைத்துக்காட்டு
உன் அன்பைக் கூட்டு
பிறகு
அவளின் பெற்றோரே
கட்டி வைப்பர்
உன்னைக் கூட்டு
விடா முயற்சி வெல்லும்
இப்படிக்கு
காதலை வென்றவன்