அம்மா

அம்மா

உயிரின் ஆதியானவள்
உண்மையின் உருவானவள்
பெண்மைக்குள் ஆண்மை கொண்டு
பெரும் சக்தி கொண்டவள்

அன்பின் அருவியவள்
பண்பின் பாசறை அவள்
தண்ணீரிலிருந்து பாலை பிரிக்கும்
அன்னம் தான்
குருதியினை பாலாக்கும்
சக்தி அம்மா தான்
ஆண்டவனின்றிக் கூட
அணுக்கள் அசையும்
அம்மாவின்றி அவனியில்
எதுதான் அசையும்.

எழுதியவர் : மு. ஏழுமலை (30-Apr-19, 10:27 am)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : amma
பார்வை : 287

மேலே