பூவைப்பூ

பூஞ்சோலையில் வித விதமாய்ப் பூக்கள்
பூத்துக்குலுங்க அத்தனையுமே அழகாய்
இருக்க அதன் நடுவே நீ நடந்து வந்தாய்
புன்னகைப்பூத்து நீயும் ஒரு பூவாய்
அத்தனைப்பூக்களிலும் தனித்து நின்றாய்
புன்னகைப்பூவாய் பூவையே என்னென்பேன்
உன்னை என் எழில் அரசியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-May-19, 9:21 am)
பார்வை : 103

மேலே