அடர்ந்த முத்தம் அழுத்தித் தந்தால்
உன் உருவமே சிறு விதையாக
நெஞ்சமே கரிசல் மண்ணாக
நினைவே அதில் நீராக
நெஞ்சுக்கூண்டில் குறு மரமாக
நெடுநாட்களாய் வளர்த்து விட்டேன்
உன் நினைவோடு பலநாட்கள்
நீக்கம் காணா அன்போடு
நெகிழ்வாய் வாழ்ந்து வந்தேன்
நீரினும் மென்மையாளே
எனை நீங்காதே எந்நாளும்
வானில் தோன்றும் வில்போலே
என் நெஞ்சில் தோன்றிய மின்மின்னியே
நாசி சிவந்த பைங்கிளியே
காணும் பொருட்கள் யாவினிலும்
உன் மோகன உருவம் தெரியுதடி
ஆவின் பாலின் வெண்ணெய் எடுத்து
அற்புதமாய் வார்த்தெடுத்த சித்திரமே
அழகுக் கமல நிறத்தாளே
அதரம் குவித்து அடர்ந்த முத்தம்
அழுத்தித் தந்தால் மகிழ்ந்திடுவேன்.
- - - நன்னாடன்