உயிர்பித்திடுவாயாக

மீளா இரவும் தூங்கா விழிகளும்
மெல்ல தழுவிடும் தென்றலும்
புன்னகைத்த நிலவும் உம் முகமும்
இருண்ட வான்வெளியில் மிண்ணும் நட்சத்திரங்களும்
கண்ணடிக்கும் உம் விழிகளும்
நீண்ட கரையும் ஓயாத அலையும்
ஓர பார்வையும் கலங்கரை விளக்கும்
உம் அசைவும் அதில் இசையும் இதயமும்
யானும் யாவும் என் காதலும் .
உம் விடியலை நோக்கியே!

பூவே மௌனம் உடைத்து
உம் காதல் கதிர்களால்
நினைவிலும் நிஜத்திலும்
.
.
.
.
.
.
.
.
அரவணைத்து உயிர்பித்திடுவாயாக!

எழுதியவர் : (9-May-19, 4:50 pm)
சேர்த்தது : யாளி
பார்வை : 240

மேலே