காதலை யாரடி முதலில் சொல்வது 555
என்னுயிரே...
நான் உன்னை முதன் முதலில்
பார்த்த நாள் முதல்...
எனக்குள் நீ
வந்துவிட்டாய்...
உன்னை நேரில் சந்தித்து
நான்
பேசும் ஒவ்வொரு நாளும்...
உன் விழிகளை நேருக்குநேர்
பார்த்தே பேசதெரிந்த எனக்கு...
சில நாட்களாக
முடியவில்லையடி...
உன் விழிகளை நேருக்குநேர்
நான் காண என்னுயிரே...
இதுதான்
காதலின் ஆரம்பமா...
இப்போதெல்லாம் நீயம்
அவ்வப்போது
மண் பார்த்து பேசுகிறாய்...
என்னை போல் உனக்குள்ளும்
காதல் மலர்ந்துவிட்டதோ...
முதலில் சொல்வது நீயா நானா
போட்டியில் செல்கிறோமோ நாம்...
இலைகளின் நடுவில் வீழ்ந்து
செல்லும் மழைத்துளி போல்...
எனக்குள் நீயும்
வந்ததென்னடி கண்ணே...
சொல்லாத
காதல் சுகம்தான்...
சொல்லிவிட்டால்
இன்னும் சுகம் அல்லவா.....