மொட்டு

முன்னுரை
ஒரு சிறுமி 10 and 14 வயதுக்கு முன்
மொட்டாக இருந்து பின் மலர்ந்து பல வாலிபர்களின் மனதைக் கவரும் பூத்த மலராகிறாள். இது இயற்கை. சில ஆபிரிக்கநாட்டுசிறுமிகள் 10 வயதுக்கு முன்பே பூத்து விடுவார்கள். இந்த சிறு கதை பல காலம் பூக்காத ஒரு சிறுமி பற்றிய யாதார்த்தமான கதை
****
அன்று வந்த பத்திரிகையில் ராஜலிங்கத்தின் மூத்த மகள் கமலாதேவி ஜகர்த்தாவில் நடக்க இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில்பங்கு கொள்ள இலங்கையில் இருந்து செல்லும் குழுவில் ஒரு வீராங்கனையாக அரசால் தெரிவு செய்யப்பட்டாள் என அறிந்து வல்லிவட்டித்துறையே சந்தோசப் பட்டது . அதுவும் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள , தேசிய தமிழ் தலைவர் பிறந்த வல்லிவட்டித்துறை நீச்சல் வீரர்களையும் மாவீரர்களையும் உருவாக்கிய மண். இதுவரை ஒருவரும் அந்த ஊரிலிருந்து சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்ளப் போகவில்லை. இதுவே முதல் தடவை நடந்துள்ளது.
ராஜலிங்கம் ஒரு ஓய்வு பெற்ற விளையாட்டு - தேகப்பியாச ஆசிரியர். அவரது முப்பது வருடச் சேவையில் வட மாகாணத்தில் ஐந்து கல்லூரிகளில் வேலை செய்தஅனுபவம்உள்ளவர் . ராஜலிங்கம் ஒரு கிரிக்கேட் , கைப்பந்தாட்ட வீரனாக இருந்தவர் .அவருக்கும் அவர் மனைவி ராஜம்மாவுக்கும் பிறந்தது மூன்று பெண்கள் . ஆண் மகன் பிறந்திருந்தால் அவன் மாவீரனாகி இருப்பான் . ராஜலிங்கத்தின் குடும்பத்தில் மூத்த மகள் கமலாதேவி, அவள் மெல்லிய தேகம் கொண்டவள் . அதற்கு அடுத்தவள் ரதி தேவி . மூன்றாவது செல்வதேவி . எனக்கு ஆண் பிள்ளைகள் இல்லாவிட்டாலும் எனது மூன்று பெண்களும் விளையாட்டு, படிப்பு, இசை ஆகியவற்றில் திறமையாக இருந்தனர். அதில் இருபது வயதுடைய கமலா என்ற கமலாதேவி வடமாகாண கல்லூரிகளுக்கு இடையில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து பல பரிசுகள் பெற்று
அவள் படித்த கல்லூரிக்குப் பெருமை தேடிக் கொடுத்தவள்
ராஜலிங்கத்தின் பதினெட்டு வயதுடைய மகள் ரதிதேவி பெயருக்கு ஏற்ற அழகி . பதின்ரெண்டு வயதில் ருதுவானவள். அவள் தனது அக்காவைப் போல் விளையாட்டில் சிறந்து விளங்காவிட்டாலும் படிப்பில் கெட்டிக்காரி. தான் படித்து டாக்டராக வேண்டும் என்பது அவளின் குறிக்கோள் , ராஜலிங்கத்தின் கடைக்குட்டி செல்வதேவி பத்து வயதில் ருதுவாகி அவர் குடும்பத்தில் சாதனை படைத்தாள் . அவள் பாடுவதில் கெட்டிக்காரி. அவள் ருதுவான போது அவளை ராஜலிங்கத்தின் அக்கா தன் ,மருமகளாக்க அவரின் சம்மதத்தைப் பெற்றாள்.
இவர்களில் ராஜலிங்கத்தின் அவர் மனைவிக்கும் கவலையைத் தருபவள் கமலா. இருபது வயதாகியும் பூப்படையாத மொட்டாகவே இருந்தாள். ஊர் சனங்களின் விமர்சனத்துக்கு ஆளானவள்.
தன் தங்கைமார் இருவரினதும் பூப்பு நீராட்டு விழாவின் போது கமலா தன் தாயைப் பார்த்துக் கேட்டாள் “ அம்மா எனக்கும் தங்கச்சிமார் போல் பூப்பு நீராட்டு விழா நடக்குமா அல்லது நான் பூப்படையாமலே இருப்பேனா”?
ராஜம்மா சொன்னாள் “ கமலா எல்லாம் உனக்கு நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும். நீ உடலை வருத்தி விளையாடுகிறாய் . அதோடு உனக்கு மெல்லி உடம்பு . உன் தங்கச்சி மார் போல் அல்ல. என் அம்மம்மாவும் உன்னைப் போல் அதிக காலம் ருதுவாகாமல் இருந்தவ. நீ ஒன்றுக்கும் யோசிக்காதே. எல்லாம் முருகன் கிருபையால் நடக்கும்”

“அம்மா என்றை கல்லூரியிலை என் சினேகிதிகள் என்ன பகிடி செய்யினம் எனக்கு இருபது வயதாகியும் என் மார்பகம் பெருக்கவில்லையாம் அதனாலை எனக்குக் கலியாணம் நடக்காதாம். நான் ஒரு ஆணாக பிறந்திருக்க வேண்டுமாம். அது உண்மையா அம்மா”?

“கமலா நீ விளையாட்டில் பல பரிசுகள் பெற்றுச் சிறந்து இருபதால் மற்றவர்களுக்கு உன் மேல் பொறாமை. அதனாலை அப்படி தேவை இல்லாமல் உன்னிலை குறை கண்டு பிடித்து இல்லாதது பொல்லாததை கதைப்பினம். நீ அதைக் கேட்டு தேவையில்லாமல் உன் மனதை அலட்டிக் கொல்லாதே. நான் உன் சாதகத்தை ஊரெழு சாஸ்திரியிடம் காட்டி கேட்டேன். அவர் சொன்னார் உனக்குப் பிள்ளை பாக்கியம் இருக்குது எண்டு. உனக்கும் உன் தங்கச்சியைப் போல் சொந்தத்தில் தானாம் திருமணம். நீ பேரும் புகழுடனும் இருசுப்பியாம்”.

“அம்மா என்னை டாக்டரிடம் கூட்டிப் போய் என் உடலைப் பரிசோதித்துப் பார்த்து நான் பெரிய பிள்ளையாகத் தாமதம் ஆவதன் காரணம் கேட்டால் என்ன?. பெண் நோய் மருத்துவர் (gynecologist)
டாக்டர் திருமதி திலகவதி என்னைப் பரிசோதித்து என் பிரச்சனைக்கு என்ன மருத்துவம் செய்யலாம் என்றுகேட்டால் என்ன”?

“ஆர் உனக்கு உந்த யோசனை சொன்னது”?

“என்றை சயன்ஸ் டீச்சர். அவவுக்கு இது பற்றி ஓரளவுக்குத் தெரியும் அம்மா”.

“நான் உன் அப்பாவோடு பேசி உன்னை டாக்டர் திலகவதியிடம் கூட்டிப் போய் காட்டுறன். நீ ஒண்டுக்கும் யோசிக்காதே கமலா “
****
டாக்டர் திலகவதி கமலாவைப் பரிசோதித்து விட்டுச் சொன்னார் ” ஒரு பெண்பூப்படைதல் 10 வயதிலோ அல்லது தாமதித்து 14 வயதிலோ நடக்கலாம் மார்பகங்கள் உடல் நிலையைப் பொறுத்துத் தாமதித்து வளர்ச்சி அடைகின்றன .
உடல் பாலியல் சுரப்பிகள் உற்பத்தி ஆகும் போது பருவ மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள் சாதாரணமாக வயது 10 முதல் 16 வயதுடையவர்களுக்கு தோன்றும்.
தாமதமாக பருவமடைந்தால், இந்த மாற்றங்கள் ஏற்படாது. சிறுமிகளை விடச் சிறுவர்கள் தாமதமாகப் பருவமடைதல் மிகவும் பொதுவானது.
தாமதமாக பருவமடைந்த பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வளர்ச்சி மாற்றங்கள் சில நேரங்களில் வழக்கத்தை விடத் தாமதித்து ஆரம்பிக்கின்றன, அதைத் தாமதமாகப் பூப்பு (late Boomer) என்று அழைப்பர்.
பெண்கள் தாமதமாகப் பருவமடைய மற்றொரு பொதுவான காரணம் உடலில் கொழுப்பு குறைவு . உங்கள் மகள் மெலிந்தவள். விரைவாக ஓடுவதும் உயரம் பாய்வதும் தேகப்பியாசம் செய்வது போன்ற செயல்களில் கமலா ஈடுபடுவதால் அவளின் உடலில் கொழுப்பு குறைவு உணவு குறைத்து உண்கிறாள் கமலாவின் உடல் மெல்லியதாக இருப்பது அவள் பருவமடைய தாமதமாகிறது
நீச்சல் செய்பவர்கள் , உயரம் பாய்பவர்கள் ரன்னர்ஸ் அல்லது நடனக்கலைஞர்கள் போன்ற செயல்களில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளவர்களுக்குப் பூப்பு தாமதமாகலாம்
போதுமான ஊட்டச்சத்து இல்லாதவர்களுக்கும் இந்த நிலை ஏற்படலாம்
கருப்பைகள் மிகவும் சிறிய அளவு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் போது தாமதமாகப் பருவமடைதல் ஏற்படலாம். இது ஹைபோகனாடிசம் என்று அழைக்கப்படுகிறது.கருப்பைகள் சேதமடைந்தால் அல்லது அவை வளரவில்லை என்றால் இது நிகழலாம். பருவமடைய உதவும் மூளையின் பாகத்தில் ஒரு பிரச்சனை இருந்தால் இந்த நிலை ஏற்படலாம்.
சில மருத்துவ நிலைகள் அல்லது சிகிச்சைகள் ஹைப்போகனாடிசத்திற்கு வழிவகுக்கலாம்: இன்னும் ஓரிரு வருடங்களில் உங்கள் மகள் பூப்படையலாம். இந்த பூப்பின் தாமதம் மரபணு வோடும் தொடர்புள்ளது. உங்கள் சொந்தத்தில் எவராவது தாமதித்து பூப்படைந்து உள்ளார்களா”? டாக்டர் திலகவதி கேட்டார்.

“என் அம்மம்மா தாமதித்து பதினெட்டு வயதில் பூப்டைந்தவ அவவும் என் மகள் கமலாவைப போல் ஒரு காலத்தில் விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளாவ . அவவுக்கும் மெல்லிய உடம்பு” கமலாவின் தாய் சொன்னாள்

“கமலா உமக்கு ஓன்று மட்டும் சொலுறன். பிறர் உமது பூப்பு தாமதமாதை விமர்சிப்பதை உமது மனதைப் பாதிக்கும் விதத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது . இதனால் மன நோய் வராலாம். பொறுமையாக இரும் வெகு விரைவில் நீர் பூப்படைவீர் . உமது உடலின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளும்: : என்று புத்தி மதி கமலாவுக்குச் சொல்லி டாக்டர் அனுப்பினார்.

*****
கமலா ஜக்ர்தாவுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் போட்டியில் கலந்து கொள்ளச் சென்றாள். பெண்களுக்கு மேற்பார்வையாளராக இருந்தது சுசந்திக்கா என்ற சிங்கள பயிற்சியாளர். முதல் நாள் நடந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கமலா நான்காம் இடத்தை பெற்றாள் அடுத்த நாள் உயரம் தாண்டும் போட்டியில் அதிக உயரத்தைத் தாண்டி முதலாம் இடத்தைப் பெற்றாள். பரிசு கொடுக்கும் மேடையில் கமலா ஏறும் போது தன் வயற்றில் திடீர் என்று ஒன்றுமில்லாத இறுக்கம் வந்ததைக் கண்டு கமலாவின் உடல் வியர்க்கத் தொடங்கியது வயிற்றை பிடித்தபடியே சற்று சிரமத்தோடு பரிசை பெற்றுக் கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கி சுசந்திக்கவுக்கு தனது நிலையைச் சொன்னாள். அந்த மேற்பார்வையாளர் சுசந்திக்காவுக்கு கமலாவின் பிரச்சனை நன்குதெரியம். அவளுக்குக் கமலாவின் நிலை உடனே புரிந்து விட்டது
” கமலா உனக்குக் கிடைத்த முதல் பரிசோடு சேர்ந்து நீ எதிர்பார்த்த இன்னொரு பரிசும் கிடைத் திருக்கு. நீ பூப்படைந்து விட்டாய் இனியும் நீ ஒரு மொட்டல்ல” என்றாள் சுதந்திக்கா.

மகிழ்ச்சியால் சுசந்திக்காவுக்கு கமலாவினால் பதில் சொல்லமுடியவில்லை. தன் அறைக்குள் போய் தன் தாயுக்கும் தந்தைக்கும் தான் பூப்படைந்த் செய்தியைச் சொன்னாள்.

****


(யாவும் புனைவு)

எழுதியவர் : Pon Kulendiren (15-May-19, 7:11 am)
Tanglish : mottu
பார்வை : 172

மேலே