பட்டதாரியின் போராட்டம்
அன்று
ஒருநாள் இரவில்
உறவும் நிலவும்
காவல் காத்து நிற்க -- இரு உயிர்கள்
உல்லாச உலகத்தில்
சுற்றித்திறிந்தனர்!!
நிலவு கறையேற
வெட்கம் குறையாமல்
குணிந்த தலை நிமிராமல்
கதவின் தாழ்திறந்து
காலை விடியலை
கண்களால் கண்டனர்...
அவளின் உயிர்
இரட்டிப்பானதென்று
அனைவருக்கும் ஒரு இன்பம்!
பத்துமாதம் பயத்திலே
பக்குவமாய் இருந்து -- உலகின்
பார்வைக்கு உதயமாக
என்னை ஈன்றெடுத்தாள்!!
வளர்ச்சியின் வழக்கமான
ஒவ்வொரு நிலையையும்
கடந்தேன் -- காலம்
கொஞ்சம் நடைபோட
தெளிவாக நடந்து
ஞாபகம் வரும்போது
வயது ஐந்து!!
கைகள் நீண்டு
காதுகளை தொட்டது
அன்றொரு புதிய ஓசையை கேட்டேன்
அதுதான்
பள்ளிக்கூடத்து மணியாம்!!
அந்த ஓசைமேல்
பயத்தை காட்டி -- அது
கேட்கும் முன்னே
குளித்து முடித்து
சிங்கார நடைபோட்டு
சீக்கிறமாய் பள்ளிக்கூடம் சென்றேன்!!
கருப்பு நிற பலகையில்
வெள்ளைக்கட்டி தீண்டி
ஏதேதோ எழுத!
எல்லாமே அதிசயமாய் இருந்தது!!
அதுவே
பழகியும் வந்தது!!
இப்படியே
வருடங்கள் ஓட
வந்து நின்றது
பருவ வயது...
அதுதான்
பதிமூன்று வயதாம்
வருபவர் போவர் எல்லாம்
வயது என்னவென்று
கேட்க -- அதற்கு
நான் பதிலளிக்க!
இந்த வயதில் நீ
எதையும் கேட்டமாட்டாயென்று
அவர்களே ஒரு மதிப்பீட்டினை
என்மேல் தீர்மாணித்தனர்!!
இப்படி ஒரு
இரண்டு வருடம் கழிய
சந்தேக பார்வை
என்மேல் விழுந்தது...
அதற்கு காரணம்
பதிணைந்து வயதாம்
பத்தாம் வகுப்பு தேர்வாம்
பலரின் விதியை தீர்மாணிக்க
விதைகள் இங்குதான்
விதைக்கப்படுகிறதாம்!!
ஏளன பார்வையில்
சமுகம் என்னை பார்க்க
அச்சத்திலே அலைந்து
திரிந்தேன் -- அதில்
வெற்றியை கண்டேன்!!
பதினேழு வயது முடிவு
அங்கு
பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வு!
தேர்வின் முடிவுகள்
தெரியும் முன்னே...
தெருக்களின் மத்தியில்
என்மேல் ஒரு விமர்சனம்!!
இவன் தேரமாட்டானென்று...
ஒருவழியாக இதிலும்
வெற்றி கண்டு
பதினேழை கடந்து
பதிணெட்டில் விழுந்தேன்
எழுந்த இடம் கல்லூரி!!!
கனவுகள் பூக்கும் இடமது
காலங்களை விளக்கும் விடையிது
நட்பின் ஆழத்தை பார்க்கும் நம்பிக்கையிது!!
இங்கு
ஒரு பட்டம் பெறவேண்டுமாம்
அதை பெற
மூன்று ஆண்டுகள் ஆகுமாம்!!
ஒரு ஆண்டிற்கு
இரண்டு முறை பருவ தேர்வு
அதை பயிலும் என்பருவம் ஒருதீவு
இளங்கலை என்னும்
ஒரு பட்டத்தினை பெறுவதற்குள்
ஒரு பாமரன் படும்
இன்னல்களுக்கு அளவில்லை!!
வண்ணத்து பூச்சிகள் சிறகடிக்கும்
கல்லுரி வானில்
பூக்களுக்கும் குறைவில்லை
புன்னகைக்கும் குறையில்லை...
எப்போதுமே
பூங்காற்றாய் வீசும் கல்லூரியில்
ஒவ்வொரு நாளும்
புத்துணர்வாய் முடிந்தது!!
கல்லூரி ஆண்டில்
நாட்கள் நடைபோட்டது தெரியாமல்
வாரங்கள் வந்துபோனது அறியாமல்
மாதங்கள் மறைவது புரியாமல்
புதிதாய் குழம்பி தவித்தேன்...
மூன்று ஆண்டுகள் முடிந்து
இறுதி தேர்வு நடக்கும் போது
குழுவாய் நின்று புகைப்படம் எடுத்தோம்!!
புரியாத குழப்பத்திற்கு
அந்த புகைப்படம் தான் பதிலாம்....
பிரிவின் வலியில்
புண்படும் ஒவ்வொரு இதயத்திற்கும்
இந்த புகைப்படம்தான் மருந்தானது!!
ஒயாத வலியாக
ஒரு வலி தொடர்ந்தது -- மருந்தாக
புகைப்படத்தை கண்டேன்!
விழுந்த கண்ணீரில்
அந்த புகைப்படம் கறையானது!!
பட்டம் பெறும் போராட்டம்
முடிந்ததென்று படுத்துறங்கினேன்
இரவுகள் என்னை
தட்டி எழுப்பியது...
எத்தனையோ இரவுகளை
என் வாழ்வில் கடந்தேன்
நேற்றிரவினை கடக்க முடியாமல்
கயப்பட்டு உறக்கத்தை தொலைத்தேன்
உறக்கமென்பதை நான்
தொலைக்கலாம்
உதயமென்பதை சூரியன்
மறக்குமா
சூரியன் சுட்டெரிக்க....
பட்டதாரியின் போராட்டம்
நேற்றோடு முடிந்ததென்று
பொறுமையாக எழுந்தேன் -- பொறுக்காத
இந்த சமுதாயம்
எனக்கு முன் எழுந்து கேட்கிறது
உனக்கு வேலையில்லையா என்று!!
நிஜத்தால் கடந்த
இருபது ஆண்டுகளை
இன்று காலையில்
நினைவுகளாக கடந்து பார்த்தேன்!
நிலையாக ஏதும் கிடைக்கவில்லை
நான் பிறந்ததற்கான காரணத்தை சொல்ல...!!