ஆடவர் அயிலாயுதம்

காமம் கனன்று கடும்பசி தீர்த்திட
ஆடவர் தேடுவது அந்தரங்க ஓர்வழி
பெண்டிர் நாடுவது அமர்காதல் சிறுபொழி
இரண்டிற்கும் இடுக்கில் உணர்வின் இடைவெளி
இருட்டடிக்கப் பட்டால் பெண்மைக்கே மிஞ்சும் வலி

தூரம் பொருட்டாது துருவம் கடந்துடும்
காலம் கணக்கிடாது காத்துக் கிடந்திடும்
பணம் பாராது பரிசுகள் இரைத்திடும்
வார்த்தையில் வரம்பின்றி வர்ணஜாலம் புரிந்திடும்

உச்சம்பெறும் சிலநொடி இன்பம் வேண்டி
அச்சம் நீர்த்து ஆணினம் அருங்கிடும்
இச்சை தீர்ந்தபின் கொச்சையாய் பேசிடும்....
எச்சில் பண்டமாய் ஏற்பாரற்று பெண்மை
மிச்சமீதியாய் பந்தியில் கிடந்திடும்....

போக வாழ்விற்கும் பொழுது போக்கிற்கும்
வரும்படிக்காய் வாடிக்கைத்தேடும் அல்வழிகள் தவிர
பெண்ணின் அகப்பாட்டு அன்பில் அகப்படுவதே
ஆணின் பயன்பாட்டு அயிலாயுதம் அதுவே

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (17-May-19, 8:10 pm)
பார்வை : 23

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே