நாம் இரு வேறு துருவமாய்
என்னை உனக்கு பிடித்தாலும்
உன்னை எனக்கு பிடித்தாலும்
நட்பென்னும் புள்ளியில்
நாம் இணைந்தாலும்
வேற்றுமை இருக்கத்தான் செய்கிறது
பாலில் மட்டுமல்ல
வசிக்கும் இடத்திலும்தான்
இருக்கிறோம் விரும்பிகொண்டே
இரு வேறு துருவங்களாய்