இமைக்கா நொடிகள்

ஒருமுறையேனும் திரும்பிப்பாா்
மறுமுறை வரும்வரை
என் உயிா் பிழைத்திருக்கட்டும்
என்ற நினைப்பெல்லாம்
கி.மு வாகிப் போனது
இப்பொழுதாவது நீ வருவாயா
என கேட்கும் ஆன்மாவிற்கு
நேற்றைய உன் திருமணத்தை
விாித்துக்காட்டக் கூட
என் விழிகளை திறக்கமுடியவில்லை
நேற்று முடிந்த என் அழுகையை
இன்றும் தொடா்கிறாா்கள்
என் உறவினா்கள் என்னைச் சூழ்ந்து.

-------- சங்காி அழகா் ----------

எழுதியவர் : (24-May-19, 4:24 pm)
சேர்த்தது : சங்கரி அழகா்
பார்வை : 397

மேலே