என்னிசை கலைஞனாய், எங்ஙனம் நீ மாறினாய்
என் சுவாசம்தனில்
உன் சுவாசத்தால் நிரப்பி,
துடிக்க மறந்த என்
இதயத்தை உன் நினைவலைகளால்
துடித்திட செய்தாய்....! உனக்காக
துடித்த இதய ஒலிதனை
யான் ரசிக்கும் முன்னே, உன்னுள்
எனை மூழ்கடித்தாய்!
எனை மறந்து
உனை ரசித்திட்ட
என் பிழைக்காக
வெற்றி நீ எனை
கொண்ட பின்னும் இதயத்தில்
வேல் பாய்ச்சி எனை
இம்சித்து, மகிழ்விக்கும்
என்னிசை கலைஞனாய்
எங்ஙனம் நீ மாறினாய்!