இயலாமை

தொடங்கியதும்
முடியும் வீடு,

கதவில்லாத
கழிப்பறை
முழு கால் நீட்ட
இயலா அறைச்சுவர்,

தவணைக்கு
வாங்கிய
நாற்க்காலி,

பாய்க்கு
தரை மேல்,
தலையணைக்கு
தட்டுமுட்டு ஜாமான்

ஒட்டையை மறைக்க
ஒரு மேல் சட்டை,
ஓட்டை பிரிக்காது
குதிக்கும் சூரியன்,

வானத்தை
தொடும்
கனவு,

வனத்தை
சுட்டெரிக்கும்
பெரு மூச்சு,,

எழுதியவர் : சபீரம் சபீரா (28-May-19, 9:08 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : iyalamai
பார்வை : 99

மேலே