நான் பாடப்போறேன்

பாதையெல்லாம் பட படக்கும் வண்ணம்.
பார்ப்போர் கண் எல்லாம் பிதுங்கும் வண்ணம்.
உன் பாதம் இரண்டும் கட கட என்று
ஆடும் வண்ணம்.
உன் கைகள் இரண்டும் கதக்களி போடும் வண்ணம்.
நான் பாடப் போறேன் பாரும்.

கடு கடுப்பான உன் முகம் கடும் கோபம் கொண்டு ஆட.
கருமை கொண்ட விழி இரண்டும் சிவந்தாடா.
ஐயனார் போல் நாக்கை நீ நீட்டியாட.
அகோரம் கொண்டு நீ ஆடும் வண்ணம்.
நான் ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாடப்போறேன் பாரும்.

உடுக்கை அடிக்காமல் மத்தளம் கொட்டாமல்.
சலங்கை கட்டாது சில்லறை கொட்டாது.
கைகள் தட்டாது ஆனால் எழுந்து உன்னை
ஆடவைக்கும் வண்ணம் நான்
பாடப்போறேன் பாரும்.

பந்தலும் இல்லாது பந்தயமும் இல்லாது.
பார்த்து மகிழவும் கூட்டம் திரளாது.
பதட்டத்துடன் உன்னை ஆட வைக்கும்
வண்ணம் பாடப்போறேன் பாரும்.

வேப்பம் பத்திரம் இல்லாது சிரிப்பொலி
நிறுத்தாது விரித்த கூந்தல் பறக்கும் படி
கட்டிய சலங்கை சிதறும் வண்ணம் நீ
ஆடி முடிக்கவே நான் பாடப்போறேன் பாரு.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (1-Jun-19, 2:10 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 106

மேலே