பசுமை நிறைந்த மரங்கள்
பசுமை என்பது மரம்,
பார்வைக்கு குளிர்மை பசுமை.
மரமே கடவுளின் வடிவம்.
மதங்கள் அதையே சொல்கிறது.
மரத்தின் கீழ் கல்வி,
மதியை வளர்க்க உதவும் மரம்.
பாதை ஓரத்தில் சடைத்து வளரந்த மரங்கள்,
பயணிகளின் களைப்பு தீர்க்கும் மரங்கள்.
மதங்கள் மரங்களை மதிப்பதுண்டு
இருந்தும் அவைகளிடையே மதங்கள் இல்லை.
இனங்கள் மரங்களில் பலவுண்டு,
இருந்தும் அவைகளிடையே இனபேதம் இல்லை.
மரங்களுக்கு பேசும் மொழி இல்லை
மொழி பேதம் அவைகளுக்கு இல்லை
வேறு பட்ட குணங்கள் அவைக்குண்டு
வேற்றுமை காட்ட அவைக்குத் தெரியாது
பயங்கரவாதம் அவைக்குத் தெரியாது
பசி தீர்க்க மட்டும் அவைக்குத் தெரியும்
விதையில் இருந்து துளிர் விட்டு வளர்ந்து
வியாதிகளை தீர்க்கும் நல்ல குணம் உண்டு
விதை, கிளை, பூ, காய், வேர் மரத்தின் அங்கங்கள,
விந்து முட்டை, குழந்தை குடும்பம் வாரிசு மனித வாழ்வில்
பூண்டு, செடி ,மரமாக வளர்ந்து
பசுமையைக் கொடுக்கும் நிறமுண்டு
புத்தர் முக்தி பெற்றதும் அரச மரத்தின் கீழ்
பெண்கள் சுற்றி வணங்குவதும் அரச மரத்தை.
வாசனை வீசும் மரங்கள் பல
வாழ் நாட்கள் நீண்ட மரங்கள் சில
மரம் இல்லையேல் மழை இல்லை
மழை இல்லையேல் மரம் இல்லை
சடைத்த மரங்கள் குளிர்ந்த நிழல் தரும்
சுமைதாங்கி அதன் கீழ் மனிதனுக்கு ஓய்வு தரும்
பருவ காலத்துக்கு ஏற்ப வளரும் மரங்கள்
பனி மழையையும் எதிர்த்து நிற்கும் மரங்கள்
ஜீவராசிகள் இல்லம் அமைக்க மரங்கள்
ஜீவனத்துக்கு அவைக்கு உதவும் மரங்கள்
அமேசன் காட்டுக்குத் துணை மரங்கள்
அதை அழித்துப் பிழைப்பர்கள் மனிதர்கள்
பஞ்ச பூதங்களுக்குள் சக்தி,
பசுமை உள்ள மரத்துக்குள்ளும் சக்தி.
எழுத்தாளன் கருவில் தோன்றும் மரங்கள்,
எந்த வடிவிலும் புனைவில் வரும் மரங்கள்.
பசுமை என்ற பெயரால் அரசியல் கட்சிகள்,
பாமரரை இன்னும் கவராத கட்சிகள்.
பல வழிகளில் மரத்தின் குடும்ப வளர்ச்சி.
பார்த்து அதன் வழியே அரசியலில் குடும்ப வளர்ச்சி.
காற்றில் அசையும் மரம்.
கவர்ச்சியைக் கொடுக்கும் மரம்.
இயற்கையின் அங்கம் மரம்
இதில் சந்தேகம் இல்லை நிட்சயம்
****