சிரிப்பு வரலையே

எப்பிடி எல்லாம் சைவம் சாப்பிடலாம்

உப்பும் புளியும் காரமும் சுள்ளிடப்போட்ட சாம்பாறை
குழைவாய் வெந்த குத்தரிசி சோற்றினுள்
பாத்தி கட்டி நடுவில் ஊற்றி பிசைந்து
மோர் மிளகாய்ப் பொரியலை கடித்து
மதிய சாப்பாட்டை ரசித்து உண்ணும் நான்
'கொஞ்சம் தயிர் வாங்கீட்டு வாங்கப்பா நாளைக்கு'என்கின்றேன்
விரல் நுனியில் இருந்த கடைசி பருக்கையையும் விடாது சுவைத்த வண்ணம்;
இன்று தயிர் இருந்திருந்தால் சுவை இரட்டிப்பாக இருந்திருக்கும் எனும் கற்பனையுடன் ...!

ஆம்! அன்றன்று இல்லாதது தான் தேவைப்படுகின்றது மனித மனதிற்கு.

~ நியதி ~

எழுதியவர் : நியதி (7-Jun-19, 3:34 pm)
பார்வை : 117

சிறந்த நகைச்சுவைகள்

மேலே