மொழிகளின் தாய்

மொழிகளின் தாய் !!

இரண்டடியில் இவ்வுலகையளந்த
ஈரடி குறளரசன் வாழ்ந்தது
தமிழ் மொழியே !
கண்ணம்மாவின் காதலன் -அவன்
காதல் கொண்ட மொழியும்
தமிழ் மொழியே !
கட்டுத்தறியும் கவிபாடியது -எம்
கம்பன் வாழ்ந்த தமிழ் மொழியே!
உயிரும் மெய்யும் இணைவது
இனத்திற்காக மட்டுமல்ல,
எழுத்துகளுக்காகவும் என்று
உணர்த்துவதும் தமிழ் மொழியே!!
சீனப் பெருஞ்சுவர் பெருமையாக
தாங்கி நிற்பதும் தமிழ் மொழியே!
மாமுனிகளின் முதல்வன்,
பொதிகை யின் தலைவன்,
ராமனுக்கு போதித்தவன்,
சிவனை தெற்கிலிருந்து
சமன் செய்தவன் - குடமுனி
இயற்றிய அகத்திய
இலக்கணம் தமிழுக்கே!
சுட்ட பழமிட்ட தமிழ் கடவுள் - ஔவை
மொழி கேட்டதும் தமிழ் மொழியிலே!!
செம்மொழியான தமிழ் மொழியை
செம்மையாக வாழ வைப்பது
நம் தமிழர் வாய் மொழியிலே!!

- மொழிலினி

எழுதியவர் : மொழிலினி (Babeetha) (8-Jun-19, 8:09 am)
சேர்த்தது : Babeetha- மொழிலினி
Tanglish : mozhikalin thaay
பார்வை : 759

மேலே