அன்னை

திரைக்கடல் ஓடி திரவியம் சேர்த்தான்
மனதில் எண்ணியதெல்லாம் தன் பெரும்
தனம்கொண்டு வாங்கினான் கர்வம்
அவன் கண்களை மறைக்க தன்னை
வளர்த்து ஆளாக்கிய அன்னையை ஏனோ
தன்னிடம் வைத்து காக்காது தவறி
தனிமையில் விட்டுவிட்டான் ஓர் முதியோர்
இல்லத்தில்- ஊர் மக்களுக்கு தன் அன்னைமீது
பெரும் பாசம் வைப்பதாய்க் காட்ட அன்னையின்
பிறந்தநாளில் துலாபாரம் நடத்த முற்பட்டான்
அன்னையை ஒரு பக்கம் குத்தவைத்து
தராசின் மறுபக்கம் தங்கக்கட்டிகள் வைக்க
ஆச்சரியம், எதனை தங்கம் வைத்தாலும்
ஈடு செய்ய முடியவில்லை -இறுதியில்
தன் தவற்றை உணர்ந்தவன்போல் தங்கமெல்லாம்
எடுத்துவிட்டு அங்கு தானே உட்கார தராசு
சமமானது ! ஆம் அவன் அன்பிற்கு அன்னை
அவன் அன்னை அடிமை என்பதை அப்போது
உணர்ந்தான் தெளிந்தான் அவன்

அன்பின் உறைவிடம் அன்னை அவள்
தனக்கென்று அன்னை வேண்டுவதொன்று
ஒன்று உண்டென்றால் அதுதான் பிள்ளைகள்
காட்டும் அன்பும் பரிவும் வேறொன்றுமில்லை
எந்நாளும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Jun-19, 11:25 am)
Tanglish : annai
பார்வை : 1405

மேலே